அஸ்ஸலாமு அலைக்கும் **

Sunday, January 4, 2015

முத்துப்பேட்டை தர்கா தாக்குதலில் துணிச்சலுடன் செயல்பட்ட சப் இன்ஸ்பெக்டர்.. பாராட்டு குவிகிறது

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஜம்புவானோடை தர்காவில் ஏற்பட்ட கலவரத்தின்போது 150 -க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து தர்கா மீது தாக்குதல் நடத்தியபோது தனி ஆளாக இருந்து தனது உயிரையும் பொருட்படுத்தாமல் கலவரக்காரர்களை விரட்டியடித்துள்ளார் சப் இன்ஸ்பெக்டர் சாமிநாதன்.

Saturday, January 3, 2015

லால்பேட்டையில் வடக்கு தெரு மாபெரும் மீலாதுன் நபி விழா

லால்பேட்டையில்.. ஷைகுல் மில்லத் இளைஞர் மன்றம் மற்றும் சீரத் கமிட்டி நடத்தும் மாபெரும் மீலாதுன் நபி விழா மற்றும் குர்ஆன் மனனப்போட்டி இஸ்லாமிய பேச்சுப் போட்டி பாிசளிப்பு விழா.. நாள்:- 07.01.2015 புதன்கிழமை

 நேரம்:-மாலை 4.00 மணி இன்ஷா அல்லாஹ்..
இடம்-ஷைகுல்மில்லத் நினைவரங்கம், வடக்கு தெரு, லால்பேட்டை
 

Saturday, December 27, 2014

லால்பேட்டை ஜாமிஆ கல்வியல் வளாகம் திறப்பு விழா

லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியின் 150 ஆம் ஆண்டு நினைவு கல்வியல் வளாக புதிய கட்டிடம் திறப்பு விழா  26.12.2014 இன்று மாலை நடைப்பெற்றது.
 

Thursday, December 18, 2014

இனி பயமில்லாமல் “பேஸ்புக்” பக்கங்களில் கருத்து தெரிவிக்கலாம் – சுப்ரீம் கோர்ட் அதிரடி

டெல்லி: சமூக வலைதளங்களின் மூலமாக கருத்துகளை வெளியிடுபவர்கள் கைது செய்யப்படக் கூடாது என்ற அதிரடி உத்தரவினை உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது."தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 66 ஏ பிரிவு உடல் ரீதியாகவோ அல்லது கலாசார ரீதியாகவோ பிறரை மிரட்டி இடையூறு செய்ய நினைப்பவர்கள் மேல் தான் பாய வேண்டுமே தவிர சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிப்பவர்கள் மீது பாயக் கூடாது" என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசும் தன் தரப்பு கருத்தை பதிவு செய்தது. இதையடுத்து இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது உச்சநீதிமன்றம்

Tuesday, December 2, 2014

கிறிஸ்துவர்-முஸ்லிம்கள் ராமரின் பிள்ளைகள்: மத்திய அமைச்சர் சாத்வி பேச்சு- ராஜினாமா செய்ய கோரிக்கை!!

டெல்லி: நாட்டில் வாழும் கிறிஸ்துவர்கள், முஸ்லிம்கள் அனைவருமே ராமரின் பிள்ளைகள்.. இதை ஏற்காதவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறலாம் என்று மத்திய தொழில் மற்றும் உணவு துறை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி பேசியிருப்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மத்திய அமைச்சர் சாத்வி ஜோதி பதவியை ராஜினாமா செய்தாக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

Friday, November 28, 2014

சென்னை ஏர்போர்ட்டில் இந்த 43 நாட்டினர் வந்து இறங்கிய பின் விசா வாங்கிக் கொள்ளலாம்

பனாஜி: 43 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் கோவா உள்பட 9 நகர விமான நிலையத்தில் வந்திறங்கியதும் இ-விசா வழங்கும் திட்டம் வியாழக்கிழமை துவங்கி வைக்கப்பட்டது.
 
ஆஸ்திரேலியா, பிரேசில், கம்போடியா, குக் தீவுகள், பிஜி, பின்லாந்து, ஜெர்மனி, இந்தோனேசியா, இஸ்ரேல், ஜப்பான், ஜோர்டான், கென்யா, க்ரிபாட்டி, லாவோஸ், லக்சம்பர்க், மார்ஷல் தீவுகள்,

Saturday, November 22, 2014

லால்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா சபையின் சார்பில் பெண்கள் கல்வி விழுப்புணர்வு கூட்டம்

லால்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா சபையின் சார்பில் பெண்கள் கல்வி விழுப்புணர்வு கூட்டம்; மவ்லானா பாலக்காடு சிராஜுதீன் மன்பஈ பங்கேற்பு .
லால்பேட்டை முபாரக் பெண்கள் அரபுக் கல்லூரியில் நகர ஜமாஅத்துல் உலமா சபையின் சார்பில் பெண்கள் கல்வி விழுப்புணர்வு கூட்டம் நடைப்பெற்றது . பெண்கள் அரபுக் கல்லூரி தலைவர் மவ்லானா ஏ.ஃபைஜுர் ரஹ்மான் மதனி தலைமை வகித்தார். மவ்லானா ஏ.ஃபாரூக் ஹஜ்ரத் அவர்கள் கிராஅத் ஓதினார்.

Thursday, November 13, 2014

பாபர் மசூதி இருந்த இடத்தை பார்வையிட சிபிஐ நீதிபதிக்கு அனுமதி மறுப்பு

ஃபைசாபாத்: பாபர் மசூதி வழக்கை விசாரித்து வரும் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சம்பந்தப்பட்ட இடத்தை நேரில் பார்வையிடுவதற்கு ஃபைசாபாத் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை.

உத்தரப் பிரதேசத்தின் ஃபைசாபாத் மாவட்டம், அயோத்தியில் ராமர் பிறந்த இடமாகக் கருதப்படும்
Photobucket